மும்பை,
மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 18 ஆயிரத்து 56 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 39 ஆயிரத்து 232 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 10 லட்சத்து 30 ஆயிரத்து 15 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 லட்சத்து 73 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 380 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். மராட்டியத்தில் இதுவரை 35 ஆயிரத்து 571 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.
அதவாது நோய் பாதித்தவர்களில் 2.66 சதவீதம் பேர் மரணமடைந்து இருக்கிறார் கள்.
தற்போது மாநிலம் முழுவதும் 19 லட்சத்து 64 ஆயிரத்து 644 பேர் வீடுகளிலும், 30 ஆயிரத்து 467 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புனே மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று நகர் பகுதியில் புதிதாக 1,557 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு 1 லட்சத்து 52 ஆயிரத்து 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல புனே புறநகரில் 948 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 763 பேருக்கும் புதிதாக நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.