அணைக்கட்டு,
தனிநபர் கழிவறை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 28-ந் தேதியுடன் இத்திட்டம் நிறைவு பெறுகிறது. ஆனால் இன்னும் பல பகுதிகளில் கழிவறை கட்டும் பணி முடியாமல் உள்ளது.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் 448 பயனாளிகளுக்கு கழிவறை கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் 298 பயனாளிகள் கழிவறை கட்டிவிட்டனர். மீதமுள்ள 150 பயனாளிகள் கழிவறை கட்டுவதற்கான பள்ளம் மட்டுமே தோண்டியுள்ளனர். இதையடுத்து இந்த பணிகளை நிறைவு செய்ய மாவட்ட நிர்வாகமே களத்தில் இறங்கி உள்ளது.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் பலம் வாய்ந்த சிமெண்டு தகடுகளை பயன்படுத்தி நவீன கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி இரவும், பகலும் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) ஆனந்தன் மற்றும் முதன்மை எழுத்தர் முகமது இஷாந்த் ஆகியோர் பணியாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.