மாவட்ட செய்திகள்

முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை

புதுவை முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மூலக்குளம்,

புதுவை முத்திரையர்பாளையம் சேரன்நகர் கம்பன் தெருவை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி சுதா (வயது 42). இவர்களது மகள் சூர்யா (18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனம் இறந்துவிட்டார். எனவே சுதா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. மகளின் திருமண செலவுக்காக சுதா பலரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால் யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுதா தனது மகளிடம் சொல்லி புலம்பியுள்ளார். அப்போது உனக்கு நேரமே சரியில்லை என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சூர்யா, கடந்த 9-ந் தேதி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்