மாவட்ட செய்திகள்

நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வெளிப்பாளையம்:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தி.மு.க.வின் பழிவாங்கும் போக்கை கைவிட வலியுறுத்தியும் நாகை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ ஆசைமணி, நகர செயலாளர் தங்க.கதிரவன் ஆகியோர் பேசினர்.

முன்னாள் அமைச்சர் ஜயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கழக பொறுப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்