மாவட்ட செய்திகள்

நாகையில், பா.ஜ.க.வினர் சாலை மறியல்

நாகையில், பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

வெளிப்பாளையம்:

தஞ்சை மாவட்டம் பூதலூர் மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய முயற்சி செய்து, துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாகை தாலுகா அலுவலகம் எதிரில் பா.ஜ.க.வினர் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நகர தலைவர் இளஞ்சேரலாதன், தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பானுசந்தர், மாவட்ட இளைஞரணி தலைவர் சந்தோஷ், பொது செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சுகுமார், விவேக், மாநில கல்வியாளர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல வேதாரண்யத்தில் நகர பா.ஜ.க, சார்பில் அம்பேத்கர் சிலை முன்பு நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திர குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்