மாவட்ட செய்திகள்

பொன்னேரியில் மதுபாட்டிலில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேர் கைது

பொன்னேரியில் மதுபாட்டிலில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேர் கைது செய்தனர்.

தினத்தந்தி

பொன்னேரி,

பொன்னேரியில் மதுபாட்டில்களில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி பகுதியில் உள்ள பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபாட்டில்களில் போதை மாத்திரைகளை கலந்து மதுவில் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுவில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த பொன்னேரி ஹரிஹரன் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28), ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த அருள்ஜோதி (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்