மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

ராணிப்பேட்டை காந்தி சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முகமதுஜான் எம்.பி. கலந்துகொண்டு, எம்.ஜி.ஆா. உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

சிப்காட் (ராணிப்பேட்டை),

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் உமர் பாரூக், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தாவூத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை நகர அ.தி.மு.க. சார்பில் நேற்று ராணிப்பேட்டை முத்துக்கடையில் எம்.ஜி.ஆர்.நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பிலிப்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மாந்தாங்கல் மோட்டூரில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட பொருளாளர் ஷாபுதின், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் முரளி, முன்னாள் நகர செயலாளர் என்.கே.மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பூங்காவனம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்