மாவட்ட செய்திகள்

ராயபுரத்தில் கடல் மாரத்தான் போட்டி; 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

ராயபுரத்தில் கடல்சார் சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி நடைபெற்ற ‘கடல் மாரத்தான் போட்டி’யில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரத்தில், திருவள்ளூர் மாவட்ட மீனவர் முற்போக்கு சங்கத்தின் சார்பில் கடல் மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. ராயபுரம் மேற்கு மாதா கோவிலில் தொடங்கிய மாரத்தான், கல் மண்டபம், காசிமேடு வழியாக திருவொற்றியூர் டோல்கேட் வந்து மீண்டும் மேற்கு மாதா கோவிலை வந்தடைந்தது.

சுமார் 10 கி.மீ. தூரம் கொண்ட இந்த மாரத்தானில், பள்ளி மாணவர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். அவர்களுக்கு வழிநெடுகிலும் வாழைப்பழம், ஜூஸ், மண் குவளைகளில் குடிநீர் வழங்கப்பட்டன.

கடல் மற்றும் கடல்சார் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு கடல்வாழ் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், கடல் வளத்தை பாதுகாக்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடல்சார் சுற்றுப்புற தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு