மாவட்ட செய்திகள்

சேலத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி நாளை மறுநாள் பிரசாரம் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

சேலத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

தினத்தந்தி

சேலம்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், சக்திவேல், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள் என அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்