மாவட்ட செய்திகள்

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

தென்காசி,

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய தொகுப்பின் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அரசின் செலவில் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அரசு செலவிலேயே அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சித்திக், கிறிஸ்தவ பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நில உரிமை மீட்பு அணி மாநில துணை செயலாளர் துரை அரசு கலந்து கொண்டார். ஒன்றிய செயலாளர்கள் பிரபாகர், மணிகண்டன், எட்டப்பன் உட்பட 54 பேர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் 54 பேரையும் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்