செங்குன்றம்,
பொன்னேரியை அடுத்த புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு கோபி (வயது 22) மற்றும் அவருடைய மனைவி பூஜா (20) ஆகியோர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.
பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்ததால் அவருக்கு செங்கல் சூளையில் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் வைத்தே பிரசவம் ஆனது. திடீரென தாயும், குழந்தையும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரீத்தி அளித்த புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.