மாவட்ட செய்திகள்

டிக்டாக் வீடியோவால் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரண்

டிக்டாக் வீடியோவால் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் போலீசில் சரணடைந்தனர்.

தினத்தந்தி

சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்தவர் போஸ் (வயது23). இவருக்கும், உதயா, அஜீத், விஜய், வருண்ராஜ், அக்ரம், ஆகாஷ், ராஜசேகர் ஆகிய 7 பேருக்கும் இடையே டிக்டாக் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த போஸ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதை குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து ராணிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் (24), வருண்ராஜ் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போஸ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த விஜய் (24), உதயகுமார் (20), அஜித் (22), ஆகாஷ் (23), அக்ரம் (21) ஆகிய 5 பேரும் நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே போலீசார் கைது செய்த ராஜசேகர், வருண்ராஜ் மற்றும் சரண் அடைந்த விஜய் ஆகியோர் பொன்னை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்