மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய கணவனுக்கு வலைவீச்சு

கொரடாச்சேரி அருகே குடும்ப தகராறில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

கொரடாச்சேரி,

அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது45). இவருடைய மனைவி மேனகா(32). கணவன்- மனைவி இருவரும் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பனில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் செங்கல் சூளை அருகிலேயே கொட்டகை அமைத்து தங்கி உள்ளனர். வேல்முருகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

கட்டி வைத்து தாக்குதல்

சம்பவத்தன்று வேல்முருகனுக்கும் அவரது மனைவி மேனகாவுக்கும் இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது மனைவி மேனகாவை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மேனகா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேனகா கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வரு கின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்