மாவட்ட செய்திகள்

சங்ககிரியில் உள்ள நினைவுச்சின்னத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு கலெக்டர் ரோகிணி மலர் தூவி மரியாதை

தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு கலெக்டர் ரோகிணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

சங்ககிரி,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சங்ககிரியில் அவரது நினைவுச்சின்னத்தில் உள்ள உருவப்படத்துக்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை கவுரவிக்கும் வகையில் சேலம் மாவட்டம் சங்ககிரியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ரூ.60 லட்சம் மதிப்பில் தீரன் சின்னமலை நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் பிறந்தநாளான நேற்று சங்ககிரியில் உள்ள அவரது நினைவுச்சின்னத்தில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு, தீரன் சின்னமலை நினைவுச்சின்னத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சேலம் தொகுதி எம்.பி. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் செம்மலை, சங்ககிரி ராஜா, வீரபாண்டி மனோன்மணி மற்றும் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரை முருகன், தாசில்தார் அருள், அட்மா குழு தலைவர் என்.எஸ்.எம்.மணி, சங்ககிரி பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்லப்பன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு