மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய 6 டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்

காரைக்கால் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய 6 டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

காரைக்காலை,

காரைக்காலை அடுத்த நெடுங்காடு அண்டூர் கிராமத்தில் உள்ள, நண்டலாறு ஆற்றுப்பகுதியில் சிலர் இரவு நேரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரத்தின் மூலம் சிலர் 6 டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே அதிகாரிகளை கண்டதும், மர்மநபர்கள் தங்களது டிராக்டர்கள், பொக்லைன் எந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து 6 டிராக்டர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் வாகனங்களின் எண்ணை வைத்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு