மாவட்ட செய்திகள்

வாலிபர் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை: விஷம் குடித்த தந்தையும் சாவு

பாளையங்கோட்டை அருகே வாலிபர் இறந்த துக்கத்தில் விஷம் குடித்த தாத்தா ஏற்கனவே இறந்தார். விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபரின் தந்தையும் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே உள்ள மேலக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன் (வயது 40). இவருடைய மகன் ராஜா (20). கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா குளித்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து மார்பில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். அவர் மீது அதிக அன்பு கொண்டிருந்த குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மனம் உடைந்த அவருடைய தந்தை முருகன், தாத்தா பெருமாள் ஆகியோர் விஷம் குடித்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 2-ந்தேதி பெருமாள் இறந்தார்.

முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாத்தா, மகன், பேரன் என ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்தது மேலக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு