மாவட்ட செய்திகள்

சேலத்தில் புள்ளியியலாளர் பணிக்கு தேர்வு 1,013 பேர் எழுதினர்

சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புள்ளியியலாளர் பணிக்கு நடந்த தேர்வை 1,013 பேர் எழுதினர்.

தினத்தந்தி

சேலம்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் புள்ளியியலாளர் பணிக்கான தேர்வு சேலத்தில் நேற்று 5 மையங்களில் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாடம் சம்பந்தமாகவும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொது அறிவு சம்பந்தமாகவும் என 2 கட்டங்களாக தேர்வுகள் நடந்தன.

தேர்வு எழுதுபவர்கள் மின்சாதன பொருட்களை, தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் ஒன்றான சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள கோகுலநாதா இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

புள்ளியியலாளர் தேர்விற்கு 1,570 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது நடந்த தேர்வில் 1,013 தேர்வாளர்கள் பங்கேற்று எழுதினர். இந்த தேர்வை நேர்மையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தேர்வு மையங்களை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்ட பறக்கும்படை, கண்காணிப்பு குழு, தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்