மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி அருகே கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன

அறந்தாங்கி அருகே கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.

தினத்தந்தி

அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே உள்ள திருனாளூர் தெற்கு பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.இந்நிலையில் இக்கோவிலுக்கு சொந்தமாக குளம் உள்ளது. இக்குளத்தில் ஏராளமான மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தது.மேலும் இக்குளத்தை பொதுமக்கள் குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர்.

செத்து மிதந்தன

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அப்பகுதி பொதுமக்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்தன. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மீன்களை பொதுமக்கள் எடுத்து ஒரு இடத்தில் குவித்து வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் கோவில் குளத்தை பார்வையிட்டனர். மேலும் மீன்கள் எப்படி செத்தது? விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என விசாரணை நடத்தினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்