மாவட்ட செய்திகள்

களியாம்பூண்டி கிராமத்தில் குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று

காப்பகத்தில் மொத்தம் 76 சிறுவர், சிறுமிகள் உள்ளனர். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தினத்தந்தி

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் மொத்தம் 76 சிறுவர், சிறுமிகள் உள்ளனர். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு உள்ள 4 சிறுமிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர்கள் காப்பகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து காப்பகத்தில் உள்ள மற்ற சிறுவர், சிறுமிகள், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அங்கு 7 ஊழியர்கள் மற்றும் 32 சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் அந்த குழந்தைகள் காப்பகம் முழுவதும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்த காப்பகத்தில் இருந்து சிறுவர் சிறுமிகள் வெளியே சென்று யாரிடமாவது தொடர்பில் இருந்தார்களா என்று சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் திடீரென குழந்தைகள் காப்பகத்தில் 36 சிறுவர், சிறுமிகள், 7 ஊழியர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு