மாவட்ட செய்திகள்

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு

திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

திட்டச்சேரி,

திருமருகல் ஒன்றியம் மேலவாஞ்சூர் கிராமத்தில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. வேலங்குடி முதல் செம்பியன் மகாதேவி வரை ரூ.33 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மருங்கூர் கிராமம் வடக்கு குத்தாலம், இடையாத்தங்குடி கிராமம் ஆகிய இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

அதேபோல இடையாத்தங்குடி கிராமம் கணபதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி, பனங்குடி கிராமம் சமத்துவபுரத்தில் ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் 88 காரை வீடுகளை பழுது நீக்கம் செய்யும் பணி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது திட்ட இயக்குனர் (பொறுப்பு) செயற்பொறியாளர் செல்வராஜ், ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா ஆரோக்கியமேரி, பொறியாளர்கள் செந்தில்குமார், கவிதாராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமுனா செந்தில்குமார், ரஜினிதேவி பாலதண்டாயுதம், முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்