மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு, திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியூர் ஆட்கள் தங்கி உள்ளார்களா? என்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதை முன்னிட்டு, திருமண மண்டபங்கள், விடுதிகளில் வெளியூர் ஆட்கள் தங்கி உள்ளார்களா? என்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

சட்டமன்ற தேர்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அப்போது முதல் தொகுதிகளில் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் தங்கி உள்ள வெளியூர் ஆட்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

சோதனை

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொகுதி முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிக்காக வந்து வெளியூர் ஆட்கள் தங்கி இருந்தால் அவர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தினர்.

மேலும் மாவட்டத்தில் 19 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர். தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை