மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7¾ லட்சம் மோசடி விளாத்திகுளம் வேளாண்மை அலுவலக காவலாளி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7¾ லட்சம் மோசடி செய்த, விளாத்திகுளம் வேளாண்மை அலுவலக காவலாளி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த, விளாத்திகுளம் வேளாண்மை அலுவலக காவலாளி கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கல்லத்திகிணறு பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மகன் தினேஷ் சிங் (வயது 32). இவர் விளாத்திகுளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர் தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் பாலமுருகன் (30) என்பவரிடம், வேளாண்மை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதேபோன்று கல்லத்திகிணறு வடக்கு காலனியை சேர்ந்த ராசையா என்பவரிடம், அவருடைய மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால், இருவருக்கும் இதுவரை வேலை வாங்கி கொடுக்கவில்லை.

கைது

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாலமுருகன் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அப்பாத்துரை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தினேஷ்சிங், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நேற்று தினேஷ்சிங்கை கைது செய்தனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை