மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை - போலீசார் விசாரணை

திருப்பூரில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதியில் வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் பிணத்தை மீட்டனர்.

அப்போது அவருடைய வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. இதையடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கத்திக்குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த வாலிபர் திருப்பூர் சுகுமார்நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 34) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், இவருக்கு சரிதா(30) என்ற மனைவியும், 1 வயதில் குழந்தையும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறிய ரமேசை மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சுகுமார் நகர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகள் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக 3 கொலைகள் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு