மாவட்ட செய்திகள்

வியாசர்பாடியில் பிரபல ரவுடி கைது

வியாசர்பாடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

பெரம்பூர்,

வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியை சேர்ந்தவர் காளி. இவருடைய மகன் முரளி (என்ற) பாக்சர் முரளி (வயது 34). பிரபல ரவுடி ஆன இவர் வியாசர்பாடியை சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடி நகேந்திரனின் கூட்டாளி ஆவர்.

முரளி மீது வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் முரளி 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி பகுதியில் உள்ள சாலையில் முரளி கத்தியுடன் நின்றுகொண்டு வழிப்பறியில் ஈடுபடுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் முரளியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்