மாவட்ட செய்திகள்

தமிழகம் உள்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் நுழைய தடை - எடியூரப்பா அறிவிப்பு

தமிழகம் உள்பட 4 மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதித்து முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

நாட்டில் மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள், கர்நாடகத்திற்குள் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குஜராத், மராட்டியம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் மக்களை வருகிற 31-ந் தேதி வரை கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதித்து முடிவு செய்துள்ளோம். ஆனால் படிப்படியாக அனுமதிப்போம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதுதொடர்பாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, குஜராத், மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்குள் வந்தவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. அதனால் அந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்களை கர்நாடகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளோம் என்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு