மாவட்ட செய்திகள்

மலிவு விலையிலும், தரமாகவும் ‘ரேபிட் டெஸ்ட் கருவி’ தயாரிக்க சென்னை ஐ.ஐ.டி. மும்முரம்

மலிவு விலையிலும், தரமாகவும் ரேபிட் டெஸ்ட் கருவியை தயாரிக்க சென்னை ஐ.ஐ.டி. மும்முரம் காட்டி வருகிறது. இதற்கான தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா நோய்த் தொற்றை கண்டறிய ஆர்.டி.-பி.சி.ஆர். என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருவி மூலம் நோய்த்தொற்று துல்லியமாக கண்டறியப்பட்டாலும், காலதாமதம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு துரிதமாக நோய்த்தொற்றை கண்டறியும் கருவியாக ரேபிட் டெஸ்ட் என்ற கருவியை சீனாவில் இருந்து சமீபத்தில் இந்தியா இறக்குமதி செய்தது. இதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று இருப்பதை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது.

இந்தநிலையில் அந்த கருவி துல்லியமாக முடிவுகளை தெரிவிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனை ஆய்வு செய்த ஐ.சி.எம்.ஆர். அந்த கருவியை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும் வழங்கப்பட்ட அந்த கருவிகள் திரும்பி அனுப்பப்பட்டன. தமிழகத்திலும் அந்த கருவிகளை சுகாதாரத்துறை திருப்பி அனுப்புவதாக தெரிவித்தது.

சென்னை ஐ.ஐ.டி. மும்முரம்

இந்த சூழ்நிலையில், மலிவு விலையிலும், தரமானதாகவும் ரேபிட் டெஸ்ட் கருவி தயாரிக்க சென்னை ஐ.ஐ.டி. மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக கேப்ஜெமினி என்ற தனியார் நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. கைகோர்த்து இருக்கிறது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை ஐ.ஐ.டி. தயாரிக்கும் இந்த ரேபிட் டெஸ்ட் கருவி, தரத்துடன், மலிவு விலையில், எளிதில் எடுத்து செல்லும் வகையில் இருக்கும் என்றும், 10 நிமிடத்தில் நோய்த் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்ற முடிவை இந்த கருவி தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் சென்னை ஐ.ஐ.டி. இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்