மாவட்ட செய்திகள்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் ஆய்வு

ராணிப்பேட்டை அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கலைஞர் நகர் பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தாங்கள் நீண்ட நாட்களாக வசித்து வருவதாகவும், தங்களுக்கு மின்சார வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முருகன், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு