மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

நீலகிரியில் வருகிற 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்குவதால் அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தினத்தந்தி

ஊட்டி

நீலகிரியில் வருகிற 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்குவதால் அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 414 பள்ளிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.

கொரோனா குறைந்து வருவதால், வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரியில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் 1-ந் தேதி முதல் தொடங்குகிறது.

சுத்தம் செய்யும் பணி

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளில் இருக்கை கள், மேஜைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுபோன்று மேஜைகளை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவை யான குடிநீர் கழிப்பறை வசதிகள் இருக்கிறதா என்று தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கட்டிடங்களில் ஆய்வு

பள்ளிகளை சுற்றிலும் புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆசிரியர்கள் மட்டுமின்றி மாணவர் களுடன் தொடர்பில் உள்ள ஆட்டோ, பஸ் டிரைவர்கள், பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இடியும் நிலையில் கட்டிடங்களில் உள்ளதா என்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு