மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் செல்போன் பறித்த 4 பேர் கைது

மோட்டார்சைக்கிளில் வந்த சிறுவர்கள் உள்பட 4 பேர் அத்வக் மொய்தீனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

தினத்தந்தி

பூந்தமல்லி,

சூளைமேட்டை சேர்ந்தவர் அத்வக் மொய்தீன்(வயது 26). சுவரொட்டி ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் பகுதியில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார்சைக்கிளில் வந்த சிறுவர்கள் உள்பட 4 பேர் அத்வக் மொய்தீனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

இதுபற்றி அவர் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த அமைந்தகரை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர் வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர்கள் செல்போனை பறித்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் அதில் ஒருவர் நெற்குன்றத்தை சேர்ந்த வினோத்(19), என்பதும், மற்ற 3 பேரும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள், 5 செல்போன்கள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்