மாவட்ட செய்திகள்

பெண்களை மிரட்டி தவறான செயலில் ஈடுபடுதல்: மொட்டை தலையில் ‘விக்’ வைத்து மீண்டும் வீடுகளில் திருடிய பிரபல கொள்ளையன்

சென்னையில், திருடச்சென்ற வீடுகளில் பெண்களை மிரட்டி தவறான செயலில் ஈடுபடுதல், மொட்டை தலையில் விக் வைத்து மீண்டும் வீடுகளில் திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 42). பிரபல கொள்ளையனான இவர், 2019-ம் ஆண்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருடினார்.

இவ்வாறு திருடச்சென்ற வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததுடன், அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தும் வந்தார். இதுபோல் 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்து உள்ளார்.

திருட்டு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த அறிவழகன், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து விடுதலையானார். அதன்பிறகு சென்னைக்கு வந்து மீண்டும் பல இடங்களில் பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்தார்.

வடபழனி வடக்கு மாட வீதியை சேர்ந்த மோகன்வடிவேல் மற்றும் பக்தவச்சலம் காலனியை சேர்ந்த கணேஷ்குமார் ஆகியோரது வீடுகளில் திருடிய வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார், ஓசூரில் தலைமறைவாக இருந்த அறிவழகனை கைது செய்தனர்.

அறிவழகன் எப்போதும் மொட்டை தலையுடன்தான் கடந்த 2019-ம் ஆண்டுகளில் திருடி வந்தார். அதை வைத்து தற்போது தன்னை போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் மொட்டை தலையில் விக் வைத்து வைரிசையை காட்டி உள்ளார்.

பட்டதாரியான அறிவழகன், எந்த வேலைக்கும் செல்லாமல் கொள்ளை அடிப்பதை மட்டுமே தொழிலாக செய்து வந்தார். சொகுசாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டதும், இவ்வாறு கொள்ளையடித்த பணத்தில் மசாஜ் சென்டர்களுக்கு சென்று அழகிகளுடன் உல்லாசமாக செலவு செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை