மாவட்ட செய்திகள்

ஆங்கியனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள ஆங்கியனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள ஆங்கியனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கிராமத்தின் வடக்கு வீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 450-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 40), நாரணமங்கலத்தை சேர்ந்த அபிஷேக் (18), கீழரசர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (24), விளாகத்தை சேர்ந்த மார்டின் (37) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த அபிஷேக், முருகானந்தம் ஆகிய 2 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கும், மார்டின் லால்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு