மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில், ஜமாத்துல் உலமா சபையினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத்துல் உலமா சபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை வட்டார ஜமாத்துல் உலமா சபையினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதலே கலெக்டர் அலுவலகம் அருகே தெத்தி புதுரோடு பிரியும் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகளை அமைத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலவரத்தை தடுக்கும் வஜ்ரா வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தை மீறி யாரையும் கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் அனுமதிக்கவில்லை.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து ஜமாத்துல் உலமா சபையினர் இரும்பு தடுப்புகளுக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவைக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும். வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்