மாவட்ட செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள் கபடி போட்டி: பெண்கள் பிரிவில் மதுரை அணி முதலிடம்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் மதுரை அணி முதலிடத்தை பிடித்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 3 நாட்கள் கபடி போட்டி நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் இறுதியில் பெண்கள் பிரிவில் மதுரை சக்தி டைல்ஸ் அணி முதல் இடத்தையும், 2-வது இடத்தை தூத்துக்குடி ஐ.ஐ.பி.எம்.எஸ். அணியும், 3-வது இடத்தை திருச்செந்தூர் மரிய ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பிடித்தன. அந்த அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை கூட்டுடன்காடு ஐப்ரோ அணியும், 2-வது இடத்தை தூத்துக்குடி மார்க்கெட் சி.த.அணியும், 3-வது இடத்தை தென்னவன் ரோசம்மாள் அணியும் பிடித்தன. அந்த அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை