மாவட்ட செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தச்சை கணேசராஜா அறிக்கை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறுகிறது.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தச்சநல்லூரில் நடைபெறும் கூட்டத்தில் முத்துகருப்பன் எம்.பி., வெள்ளூர் ராஜூ ஆகியோரும், குருவிகுளம் வடக்கு ஒன்றியத்தில் தூத்துக்குடி எஸ்.டி.கருணாநிதி, செங்கோட்டை ஒன்றியத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், திண்டுக்கல் எம்.குணசேகரன் ஆகியோர் பேசுகிறார்கள்.

நாளை (திங்கட்கிழமை) நெல்லையில் நடைபெறும் கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ராஜகண்ணப்பன், மேலூர் மலைச்சாமி ஆகியோரும், மானூர் வடக்கு ஒன்றியத்தில் கே.பி.முருகானந்தம், குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் ஏ.நடராஜன், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திரபிரசாத், கே.ஆர்.கருப்பசாமி, சங்கரன்கோவில் நகரில் அமைச்சர் ராஜலட்சுமி, லில்லிராஜ் ஆகியோரும் பேசுகிறார்கள்.

26-ந் தேதி பாளையங்கோட்டையில் அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, பாவலர் ராமச்சந்திரன், மானூர் தெற்கு ஒன்றியத்தில் விளதை போ.செல்வராஜ், கடையநல்லூர் ஒன்றியத்தில் கோவை புகாரி, செங்கோட்டை நகரில் மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., முருகேசன்.

27-ந் தேதி மேலப்பாளையத்தில் மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கவிமுரசு அல்லிக்கண்ணன், புளியங்குடி நகரில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், தீப்பொறி ராமலிங்கம். 28-ந் தேதி சங்கரன்கோவில் ஒன்றியத்தில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மதுரை தமிழரசன், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., கோதை தங்கவேல், மாணவர் அணி துணை செயலாளர் சோலை இரா.கண்ணன், ஏ.ஜே.ஏங்கல்ஸ் ஆகியோர் பேசுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்