திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 ஆயிரத்து 404 பயனாளிகளுக்கு ரூ.184 கோடியே 49 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடன்தாரர்களுக்கு அவர்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கப்படுகிறது.
5 பவுனுக்கு உட்பட்டு கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தை அணுகி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பெற்று கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.நடராஜன் தெரிவித்து உள்ளார்.