மாவட்ட செய்திகள்

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

தென்காசி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி,

தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து மனைவி இசக்கியம்மாள் (வயது 60). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இசக்கியம்மாளுக்கும், அவருடைய பேத்திக்கும் சமையல் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இசக்கியம்மாள் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் சுடலைமுத்து அவருடைய பேத்தியை கண்டிக்காமல், இசக்கியம்மாளை கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த இசக்கியம்மாள் கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் தனியார் தோப்பில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் இசக்கியம்மாள் என்பதும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் இசக்கியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை