மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக் கொடியுடன் தம்பதி தர்ணா

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக்கொடியுடன் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

உளுந்தூர்பேட்டை தாலுகா எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ராமர் என்பவர் அவரது மனைவியுடன் நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசியக்கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எஸ்.மலையனூர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து இருந்ததாகவும் இதை ராமர் தடுக்க முயன்றபோது அதிகாரிகள் சிலர் ஆக்கிரமிப்பாளருக்கு சாதமாக செயல்பட்டதோடு தன் மீது பொய் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் தம்பதியர் போராட்டம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கோரிக்கை தொடர்பான மனுவை கலெக்டரிடம் கொடுக்கும் படி கூறி சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட ராமர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்