மாவட்ட செய்திகள்

கழிவறையில் செல்போனை வைத்து பெண்ணை படம் பிடித்த வாலிபர்

கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து, பெண்ணை படம் பிடித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு வகோலா பகுதியில் பொதுகழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையில் பெண்கள் பகுதியையும், ஆண்கள் பகுதியையும் பிரிக்கும் சுவரில் சிறிய துவாரம் உள்ளது. சம்பவத்தன்று ஆண்கள் பகுதியில் இருந்த வாலிபர் ஒருவர், பெண்கள் பகுதியில் இருந்த பெண்ணை படம் பிடிப்பதற்காக தனது செல்போனில் கேமராவை ஆன் செய்து அந்த துவாரத்தில் மறைத்து வைத்து இருக்கிறார்.

இதை அந்த பெண் கவனித்து அதிர்ச்சியில் உறைந்தார். இதனால் பதறிப்போன அந்த பெண் அலறியபடி வெளியே ஓடிவந்தார்.

இதனால் பயந்துப்போன வாலிபர் தனது செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அந்த பெண்ணின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் அந்த வாலிபரை விரட்டிச்சென்று பிடித்தனர். மேலும் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபர் வகோலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் வகோலா தோபிகாட் பகுதியை சேர்ந்த இந்திரஜித் லக்கான்(வயது23) என்பது தெரியவந்தது. பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு