மாவட்ட செய்திகள்

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, மாடு, கோழி விலை வீழ்ச்சி

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்தது.

தினத்தந்தி

குண்டடம், மார்ச்.28-

குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகள் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்தது.

வாரச்சந்தை

குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை கோழிகள் மற்றும் ஆடுகள் விற்பனை நடைபெறும். பின்னர் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு குண்டடம், காங்கேயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, திருப்பூர், மேச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக கோழி ஆடுகள் மற்றும் மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், காளைகன்றுகளை கொண்டு வருகின்றனர்.

இவைகளை வாங்க ஊட்டி, ஈரோடு, கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, கேரளா ஆந்திரா, கர்நாடக மேச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். வாரம்தோறும் சுமார் 2 ஆயிரம் கோழிகள், 3 ஆயிரம் ஆடுகள், 2 ஆயிரம் மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.

இது குறித்து ஒரு வியாபாரி கூறியதாவது:

விலை வீழ்ச்சி

குண்டடம் வாரச்சந்தைக்கு கடந்த சில வாரங்களாக கோழி, ஆடுகள் மாடுகள் வரத்து அதிகரித்திருந்தது. அதுபோல் இந்த வாரமும் கால்நடைகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவந்தனர்

இதனால் கடந்த வாரங்களில் ரூ.40ஆயிரம் வரை விலைபோன கறவை மாடுகள் இந்த வாரம் ரூ.35 ஆயிரம் வரை விலைபோனது. ரூ.20ஆயிரம் வரை விலைபோன வளர்ப்புக் கிடாரிகள் இந்த வாரம் ரூ.15ஆயிரத்துக்கு விலை போனது. இறைச்சிக்கு ரூ.25 ஆயிரம் முதல் விலை போன மாடுகள் ரூ.20ஆயிரம் வரை விற்பனையானது.

இதேபோல் கடந்த மாதத்தில் 2 குட்டியுடன் கூடிய வளர்ப்பு ஆடுகள் ரூ.13 ஆயிரம் வரை விலை போனது இந்த வாரம் ரூ.10 ஆயிரம் வரையே விலைபோனது. மேலும் 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு கடந்த சீசனில் ரூ.6 ஆயிரத்து 500 க்கு விலைபோனது. ஆனால் இந்தவாரம் 5 ஆயிரத்து 500- க்கு விற்பனையானது. அதேபோல் 1 கிலோ எடையுள்ள கோழி கடந்த சீசனில் ரூ.330வரை விற்றது இந்தவாரம் ரூ.280வரை விலைபோனது.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு