திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 763-ஆக உள்ளது. இதுபோல் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 306-ஆக உள்ளது. மாவட்டத்தில் 233 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 224 பேர் சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.