மாவட்ட செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கரடு புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கேது என்கிற தென்னவன் தலைமை தாங்கினார். கடம்பூர் அருள், சு.வீரா, கோ.மணிமாறன், சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு, காஞ்சீபுரம் மைய மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன், மண்டல செயலாளர் விடுதலைச்செழியன், மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஆரோன் மாணிக்கராஜ், அன்புச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்