காவேரிப்பட்டணம்:
பாரூர் நீர்வள மேலாண்மை உதவி பெறியாளர் சையத் ஜாக்ருதீன் மற்றும் அதிகாரிகள் வீரமலை பகுயில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் மண் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரி சையத் ஜாக்ருதீன் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.