மாவட்ட செய்திகள்

லயோலா கல்லூரி பேராசிரியர் மீதான பணி இடைநீக்கம் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

லயோலா கல்லூரி பேராசிரியர் மீதான பணி இடைநீக்கத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை லயோலா கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜோசப். வேறொரு பேராசிரியர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த மாதம் டிசம்பர் மாதம் 7-ந் தேதி இவரை பணி இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகார் கொடுத்த 45 நாட்களுக்குப் பிறகு மனுதாரர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. புகார் மீது கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. எனவே, மனுதாரர் மீதான பணி இடைநீக்கம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கல்லூரி நிர்வாகத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மனுதாரரை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி