மாவட்ட செய்திகள்

கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில்

கோபி அருகே பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோபி,

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி கண்ணாடிப்புதூரை சேர்ந்தவர் பானுமதி. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந் தேதி மர்ம நபர் ஒருவர் பானுமதியின் வீட்டுக்குள் நுழைந்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்கள். விசாரணையில் பானுமதியின் நகையை பறித்தது திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த நடராஜ் என்பவா என்று தெரிந்தது.

இதைத்தொடர்ந்து நடராஜை போலீசார் கைது செய்து கோபி குற்றவியல் 2-வது நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் நடராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்