மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடியில் ராமானுஜருக்கு மணி மண்டபம் திறப்பு

ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தினத்தந்தி

அதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூரில் பஸ் நிலையம் அருகே சுமார் 2.77 ஏக்கர் பரப்பளவில் மணி மண்டபம், வேதபாடசாலை, அன்னதான கூடம், தங்கும் விடுதி, கழிவறைகள், திருக்குளம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கட்டிமுடிக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் குத்துவிளக்கேற்றி ராமானுஜர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, காஞ்சீபுரம் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் எஸ்.செந்தில்ராஜன், காஞ்சீபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் போந்தூர் எஸ். சேட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?