அருளானந்தம்; ஹெரேன்பால்; பைக் பாபு 
மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை; கோவை மகளிர் கோர்ட்டு உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட பலரை பாலியல்பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஏற்கனவே சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அ.தி.மு.க. முன்னாள் நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக்பாபு, ஹெரேன்பால் ஆகியோரை கடந்த 5-ந்தேதி போலீசார் கைது செய்து கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து 3 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான ஹெரேன்பாலை சி.பி.ஐ.போலீசார் காவலில் எடுத்து 2 நாட்கள் விசாரணை நடத்தினர். இதில் பாலியல் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஹெரேன்பால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆண்மை பரிசோதனை

சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அருளானந்தம், பைக்பாபு, ஹெரேன்பால் ஆகிய 3 பேரையும் கோபி சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 3 பேருக்கும் வருகிற 3-ந்தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்கள் 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்க கோரி சி.பி.ஐ. சார்பில் ஏற்கனவே கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி நந்தினி தேவி விசாரித்து அருளானந்தம் உள்பட 3 பேருக்கும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

நீதிமன்ற காவல் நீட்டிப்புக்கு பின்னர் இவர்கள் மீண்டும் கோபி கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்