பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வென்னிமலை கோவில்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டு திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
பால்குடம் ஊர்வலம்
காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருகின்றனர். பால்குடம் கோவில் வந்தடைந்த உடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பெண்கள் 1,008 திருவிளக்கு பூஜை நடத்துகின்றனர். ஏற்பாடுகளை ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.