மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கும்பகோணம்,

போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க 13-ம் ஆண்டு பேரவைக்கூட்டம் கும்பகோணத்தில் சங்க தலைவர் சி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கவுரவ தலைவர் ஜெயராமன், பேரவைத்தலைவர் ராஜேந் திரன், துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களின் மனைவியோடு அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

மருத்துவ காப்பீடு திட்டம்

அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்துக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சேமநல நிதியை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தியவுடன் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு உரிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்க பொருளாளர் செல்லதுரை நன்றி கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்