மாவட்ட செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: தமிழக பா.ஜ.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் ஜான் பாண்டியன் ஆதரவு

மேகதாது அணை விவகாரம்: தமிழக பா.ஜ.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம் ஜான் பாண்டியன் ஆதரவு.

தினத்தந்தி

சென்னை,

தமிழக பா.ஜ.க. ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

தமிழக பா.ஜ.க. இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்பட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான் பாண்டியன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழக விவசாயிகளின் நலனுக்கான இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆதரிக்கின்றோம். முழு ஆதரவையும் நல்குகின்றோம். அண்ணாமலையின் இந்த போராட்டத்தால், சிறந்த தீர்வு எட்டப்பட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு