மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி

புதுச்சேரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மறைமலையடிகள் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. நேரு என்கிற குப்புசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், நகர செயலாளர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் எம்.ஏ.கே. கருணாநிதி, தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அங்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்துடன் மேள தாளம் முழங்க, பாரம்பரிய கலை விளையாட்டுகளுடன் ஊர்வலமாக மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்றனர். அங்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் லெனின் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அவரது உருவப்படத்திற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், பேராசிரியர் ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, சுத்துக்கேணி பாஸ்கர், பிரபுதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று மறைமலை அடிகள் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள், அவைத்தலைவர் சுப்ரமணியன், இணை செயலாளர் விமலாஸ்ரீ, பொருளாளர் டாக்டர் வீரப்பன், துணை செயலாளர் தமிழரசி, செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்